வவுனியா வர்த்தக நிலையத்தில் காலாவதியாகிய உணவுப்பண்டங்கள் விற்பனை
வவுனியா - பூந்தோட்டம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சிறுவர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட கடலைப்பருப்பு பொதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி காலாவதியாகிய திகதி குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காலாவதியாகி பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
கடந்த ஒரு மாதகாலமாக நாடு முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில வர்த்தக நிலையங்களின் முன் பின் கதவுகள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் நகரில் மக்களின் நடமாட்டங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்நிலையில், நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு வழங்குவதற்கென தந்தையினால் கொள்வனவு செய்யப்பட்ட கடலைப்பருப்பு பொதிகள் சிலவற்றில் அதன் காலாவதி திகதி கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காலாவதியாகி ஒருமாதமாகிய உணவுப் பண்டங்கள் பயன்பாட்டில் உள்ளமை கண்டுபிடித்து அவற்றிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நாடு மீண்டும் திறக்கப்படும் போது பொதுமக்கள் உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளை உறுதிப்படுத்தி உன்னிப்பாகக் கவனித்து உணவுப் பண்டங்களைக் கொள்வனவு செய்வதுடன் காலாவதியாகிய உணவுப்பண்டங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
