ஹட்டனில் பாவனைக்குதவாத உணவு பொருட்கள் விற்பனை: சுகாதார பிரிவினர் பாராமுகம்
ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் பொது மக்கள் பாவனைக்குதவாத பழுதடைந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிக விலை கொடுத்து பெற்றுக்கொள்ளும் கோதுமைமா, கடலை, அரிசி, பயிறு, உள்ளிட்ட தானியங்கள் திண்பண்டங்கள் இவ்வாறு பாவனைக்குதவாத பொருட்கள் விற்கப்படுகின்றது.
இது குறித்து சுகாதார பிரிவினருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் பாராமுகமாக இருந்து விடுவதாகவும் இதனால் பொது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
விலை குறைக்கப்பட்ட பொருட்கள் மறைத்து வைப்பு
எமது நாட்டில் உணவு சட்டங்கள் உணவு பாதுகாப்பு பொறிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் காணப்பட்ட போதிலும் அவற்றினால் எவ்வித பயனுமில்லை என பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த காலங்களில் அரசாங்கம் முட்டை உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்ட போதிலும் ஒரு சில கடைகளில் குறைக்கப்பட்ட பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில வர்த்தக நிலையங்களில் குறைக்கப்பட்ட விலைகளை கருத்தில் கொள்ளாது அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் இது குறித்தும் நுகவோர் அதிகார சபையின் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்களின் முறையற்ற நியாயமற்ற செயற்பாடுகளை உடனடியாக
கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் கொண்டுவரப்படா விட்டால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவதுடன், அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை மேலும் குறைவடையும் என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.