தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு! ஜனாதிபதிக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது.
இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
தொழிலாளர்கள். 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
தோட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கியுள்ளன
இந்நிலையில் ரூ.200 அரசாங்க உதவித்தொகையை தொழிலாளர்களின் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்வதற்கு தேவையான நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.







முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam