அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு: அமைச்சரின் தகவல்
அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவிற்கு உட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் நேற்று (15.05.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அமைச்சரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த வருடமும் சம்பள அதிகரிப்பு செய்யப்படுமானால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri