இலங்கைக்குள் அறிமுகமாகும் டொலரில் ஊதியம்
கொழும்பு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு கிடைக்கும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஆயிரம் டொலருக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தொழிலின் தன்மைக்கமைய அந்த சம்பளம் மாற்றமடையும். அமெரிக்க டொலர் 1000 இல் இருந்து 3000 டொலர் வரை சம்பளம் அதிகரிக்கப்படலாம் என துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சபையின் உறுப்பினரான பேராசிரியர் பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
முதல் 5 - 10 வருடங்களில் 83 தொழில் வாய்ப்பு கிடைக்க உள்ள நிலையில் முதல் 2 வருடத்தில் 10000 தொழில் வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் 2 வருடத்தினுள் ஆரம்ப கட்டங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. நிர்மாணிப்பு துறையில் இளைஞர்களுக்கு பல தொழில்கள் கிடைக்கவுள்ளன. 2 வருடங்களுக்கு அலுவலக நிறுவனங்கள் நிறுவப்பட்டு இளைஞர்களுக்கு அலுவலக பணிகள் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல கல்வி அறிவுடன் கணினி அறிவு, தகவல் தொழில்நுட்பம், ஆங்கில கல்வி அறிவுடைய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
வங்கி, வைத்தியசாலை, பல்கலைக்கழகம், கணினி நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம், உயர்கல்வி நிறுவனம், பல்வேறு அலுவலகங்கள், பல்வேறு சேவை வழங்கும் நிறுவனங்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், கடை தொகுதிகள், சர்வதேச நிறுவனங்கள் உட்பட மேலும் பல நிறுவனங்கள் துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ளது.
இதன் போது பல்வேறு தொழில் வாய்ப்புகள் இலங்கை இளைஞர் யுவதிகளுக்குகிடைக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக நகரத்தில் 75 வீத தொழில் வாய்ப்பு இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற யோசனை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
