காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவரின் வேதனம் அதிகரிப்பு?
இலங்கையில் போரின்போது காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைக்காக, அமைக்கப்பட்டுள்ள, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் புதிய தலைவரின் வேதனம் அதிகரிக்கப்பட உள்ளது.
அலுவலகத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்கும் திட்டத்திற்கு பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த குழு கூட்டத்தில் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது, ஆனால் இப்போது அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியர்ஷன யாப்பா தலைமையில் பொது நிதி தொடர்பான குழு கூடியபோது இந்த வேதன அதிகரிப்பு முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலான் பெரேரா, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, முஜிபுர் ரகுமான், ஹர்ஷ டி சில்வா மற்றும் நளின் பண்டார உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேவேளை இலங்கை காவல்துறையின் முன்னாள் அதிபர் ஜெயந்த விக்ரமரத்ண, அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த நியமனத்தை ஆட்சேபித்துள்ள இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினர் யஸ்மின் சூகா, இந்த அலுவலகத்துக்கான, ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நிதியை நிறுத்துமாறு கோரப்போவதாக அறிவித்திருந்தார்.
இலங்கையின் முன்னாள் காவல்துறை அதிபர் ஜெயந்த விக்ரமரத்ணவை நியமித்ததன் விளைவாக இந்த நடவடிக்கையை எடுக்க்கவுள்ளதாக சூகா கூறிஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர்
தொடர்பான அலுவலகம், உலகில் இரண்டாவது அதிகப்படியான காணாமல் போனோரை பற்றி
விசாரிக்கும் அலுவலகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
