தமிழர்கள் மீதான இனபடுகொலைக்கு இதுவே சான்று..! மண்ணுக்குள் புதைந்த முன்னாள் ஆட்சியாளர்களின் கோர முகங்கள்

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Srilankan Tamil News chemmani mass graves jaffna
By Shan Aug 15, 2026 07:53 AM GMT
Report

செம்மணி சமூகப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதுடன், தமிழர் தாயக மக்களை அரசியல் நீதிக்கான மக்கள் சக்தியாக உருவெடுக்கச் செய்துள்ளதாக அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று(15.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

500-ஐ தாண்டும் மனித என்புக்கூடுகள்

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் சமூக புதைகுழி வரலாற்றில் செம்மணி சமூக புதைகுழி இதுவரை அகழ்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் அடிப்படையில் தென்னாசியாவின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது மட்டுமல்ல தமிழர் தாயகத்தில் ஆற்ற முடியாத வேதனை மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

தமிழர்கள் மீதான இனபடுகொலைக்கு இதுவே சான்று..! மண்ணுக்குள் புதைந்த முன்னாள் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் | Sakthivel S Criticism Chemmani In Jaffna

இது இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலையின் அகோரத்தினை சர்வதேசத்துக்கு உணர்த்தி உள்ளதோடு தமிழர் தாயக மக்களை அரசியல் நீதி கோரிக்கைக்கான மக்கள் சக்தியாக உருவெடுக்கவும் வழி வகுத்துள்ளது.

இதற்கு முகம் கொடுக்க முடியாத சிங்கள பௌத்த பேரினவாதம் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய இனப்படுகொலையினை மூடி மறைக்க தமிழர்கள் மீதான தாக்குதல்களை தீவிரபடுத்த தெற்கின் மக்களை அணி திரட்டுவதாகவே தோன்றுகின்றது.

இதற்கு தாயக செயலணியின் "நீதியின் ஓலம்" பதிலாக அமையும் என்றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என உறுதி செய்து தமிழர்கள் ஏற்கும் நீதியை நிலை நாட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதுவரை செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள உடலகங்களின் எச்சங்கள் தனித்தனியாகவும், குவியல்களாகவும், தாய்மார் குழந்தைகளை அரவணைத்தவாறும், தலைகள் இன்றியும், உடல் சிதைக்கப்பட்ட நிலை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் 550 அதிகமான எலும்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அகழப்படுமாயின் இதன் எண்ணிக்கை ஆச்சரியத்தை மட்டுமல்ல இலங்கையின் அரச பயங்கரவாதம் நிகழ்த்திய தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் தீவிரத்தையும் உலகிற்கு உணர்த்தி நிற்கும்.

தமிழர்கள் மீதான இனபடுகொலை

தமிழர்களைப் பொறுத்தவரையில் படையினர் எந்தெந்த படைத்தளங்களில் இருந்து அகழ முடியாது எனக் கூறுகின்றனரோ, எந்தெந்த படைத்தளங்களை அகற்ற முடியாது எனக் கூறுவதோடு அதனை விஸ்தரிப்பதற்கும் முயற்சி எடுக்கின்றனரோ அந்த படைத்தளங்களிலும்,பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் கட்டப்பட்ட விகாரைகள் அமைந்துள்ள நிலங்களிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனில் அங்கெல்லாம் சித்திரவதைக்கு உட்படுத்தி இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்கள் மர்மமான முறையில் புதைக்கப்பட்டு இருக்கலாம் எனும் சந்தேகம் தமிழர்கள் மத்தியிலே நிலவுகின்றது.

தமிழர்கள் மீதான இனபடுகொலைக்கு இதுவே சான்று..! மண்ணுக்குள் புதைந்த முன்னாள் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் | Sakthivel S Criticism Chemmani In Jaffna

தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அற்ற நிலையில் சமூக புதைகுழிகளின் அகழ்வு பணியில் இருந்து நீதிமன்ற கட்டளையின்படி எச்சங்களை பாதுகாத்தல், ஆய்வுகள், தீர்வுகள் என்பன வரை தமிழர்களின் நம்பிக்கையை ஏற்கும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு செயற்பாடுகள் அவசியம் என வலியுறுத்துகின்றோம்.

இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் செம்மணியை மையப்படுத்தி அரசியல் போராட்டம் கூர்மை அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களை குற்றவாளிகளாக்கும் செயற்பாட்டுக்காக அணி திரள்வதையும் காணக் கூடியதாக உள்ளது. அதற்கு தற்போதைய அரசாங்கமும் துணை நிற்பதாகவே தோன்றுகின்றது.

செம்மணி அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

இனவாதியும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் சிங்களவர்களின் வரிப்பணத்திலேயே செம்மணி அகழ்வுபணிகள் நடக்கின்றன.

அவர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்" எனும் தொனியில் பேசி அடிமட்ட சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டுகையில் இன்னும் ஒரு அமைப்பு ஊடக சந்திப்பு ஒன்றில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பௌத்த அடையாளங்களை எல்லாம் அழிக்கின்றார்கள் குற்றம் சுமத்துவதையும் காணலாம்.

தமிழர்கள் மீதான இனபடுகொலைக்கு இதுவே சான்று..! மண்ணுக்குள் புதைந்த முன்னாள் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் | Sakthivel S Criticism Chemmani In Jaffna

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை மீட்புக்கான போராட்டம் தமிழர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், அரசாங்கத்தோடு பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தீர்வின்றி தொடர்கையில் மேய்ச்சல் தரை சிங்களவர்களுக்கே உரியது என தெற்கை உசுப்பேத்தும் செயல்பாடும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றது.

அடுத்ததாக யுத்த காலத்தில் உயிர் பாதுகாப்பு கருதி கடல் வழியாக தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தோரை இலங்கை அரசாங்கம் எத்தகைய முன் ஆயத்தம் இன்றி இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கையில் இதற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் பேரினவாதிகள் வடக்கிலே சிங்களர்களை குடியேற்ற வேண்டும் என் கோசம் எழுப்புவதையும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.

தையிட்டி விகாரை பாதை அமைப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையில் பாதை அமைப்பது தொடர்பில் பொலிசார் கோரிய தடை உத்தரவினை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தெற்கில் இயங்கும் தேசிய பாரம்பரிய உரிமைகள் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பு கருத்து தெரிவித்த வருவதையும் சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டுவதையும் சமூக ஊடகங்களில் பார்க்கக் கூடியதாக உள்ளது.

தமிழர்கள் மீதான இனபடுகொலைக்கு இதுவே சான்று..! மண்ணுக்குள் புதைந்த முன்னாள் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் | Sakthivel S Criticism Chemmani In Jaffna

தெற்கில் இயங்கும் தமிழர் விரோத இனவாத அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கொழும்பு பணிமனையில் மனு ஒன்றை கையளித்தப் பின்னர் தையிட்டி சட்டவிரோத விகாரை விடயமாகவும், செம்மணி அகழ்வு சம்பந்தமாகவும் பிழையான தகவல்களை வழங்கி தமிழர்களுக்கு எதிரான கோபத்தினை சிங்கள மத்தியில் தூண்டி எண்ணெய் ஊற்றுவதை சமூக ஊடங்களிலே அறியக் கூடியதாகவும் உள்ளது.

எத்தகைய இனவாத செயற்பாடுகளுக்கும் எங்களுடைய அரசாங்கத்தில் இடமில்லை என்று கூறுகின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு பயந்து தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான உண்மை நிலையையும் வெளிபடுத்தாது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியையும் பெற்றுக் கொடுக்காது காலத்தை இழுத்தடிப்பதும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு துணை போகும் செயலாகவே நாம் கருதுகின்றோம்.

தெற்கின் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் ஓரணியில் திரண்டு வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இதன் அபாயத்தை உணர்ந்து தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதற்கான நீதிக் குரலே செம்மணியில் ஒலிக்கின்றது என்பதை உணர்ந்து நீதியின் ஓலத்தில் பங்கு பற்றுவதுடன் தேசியம் காக்கும் அரசியல் செயற்பாட்டிலும் தொடர்ந்து இயங்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US