ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சார்பில் ரம்புக்கனையில் ஒருவர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்: சஜித்
ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சார்பில் ரம்புக்கனையில் ஒருவர் உயிர்த் தியாகம் செய்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வதற்கான உரிமையை இல்லாமல் செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தின் ஊடாக மக்களின் போராட்ட உரிமைகளை ஒடுக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்யவே அவர் தனது உயிரை தியாகம் செய்துள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையா கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பக்கச்சார்பின்றி தண்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி செய்ய முடியாவிட்டால் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் என சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri