முட்டாள் அரசாங்கம் முட்டாள் தனமான செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு

Government Today SajithPremadasa GotabayaRajapaksa sl
By Jenitha Feb 13, 2022 10:28 PM GMT
Report

அரசாங்கம் அதன் சகாக்களுக்கு பண மோசடியில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே ஒரு இலட்சம் வேலைத்திட்டம் என்ற விளையாட்டை ஆரம்பித்து ஊழியர் சேமலாப நிதியத்திலும் கைவைத்துள்ளது எனவும்,

ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும் , பொதுத் தேர்தலில் 68 இலட்சம் வாக்குகளையும் பெற்றுள்ள முட்டாள் அரசாங்கம் , முட்டாள் தனமான செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹிரியால பிரதேசத்தில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது,

நாட்டில் தற்போது 600 - 800 மில்லியன் டொலர் மாத்திரமே இருப்பில் உள்ளது. இது அடுத்த 3 வாரங்களுக்கான இறக்குமதி செலவிற்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும்.

அதன் காரணமாக செழிப்பாகக் காணப்பட்ட விவசாயத்துறையை ஒரு இரவிற்குள் எடுத்த தீர்மானத்தினால் முழுமையாக சீரழித்து விட்டு , தற்போது நிவாரணம் வழங்குவதற்கு வைபங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து விவசாயிகளுக்கும் இலட்சக்கணக்கில் பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டு , வரையறுக்கப்பட்ட சிறிய தொகையை நிவாரணங்களை வழங்குகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தரத்தில் உயர்ந்த உரம், கிருமி நாசினி மற்றும் களை நாசினி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு நிச்சயம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றேன்.

உரம் கூட இல்லாமல் விவசாயிகளின் வாழ்வாரத்தை 100 சதவீதம் மேம்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அரசாங்கம் அது எவ்வாறு என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறான நிலையில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம் என்ற புதிய விளையாட்டையும் தற்போது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

நாட்டில் அதிகளவு நிதியைக் கொண்டுள்ள அதாவது 3000 பில்லியன் ரூபாவைக் கொண்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைத்து அரசாங்கம் இந்த விளையாட்டினை ஆரம்பித்திருக்கிறது.

ஒரு இலட்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் சகாக்களுக்கு தரகுப்பணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் , மோசடிகளில் ஈடுபடுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இதன் காரணமாகவே ஊழியர் சேமலாப நிதியத்திடம் 25 சதவீதம் வரி அறவிட திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மோசமான செயற்பாட்டிற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது. 69 இலட்சம் மக்களில் ஒரு பகுதியினர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.

ஏனையோருக்கும் எம்முடன் இணைவதற்கு கதவுகள் திறந்தே காணப்படுகின்றன. அரசாங்கம் தற்போது பாக்கிஸ்தான் , பங்களாதேஷ் மற்றும் மேற்குலக நாடுகளிடம் டொலருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது.

ரணசிங்க பிரேமதாச எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கையேந்தி உண்ணும் நிலைமையை ஏற்படுத்தவில்லை.

இவ்வாறான நிலைமையிலும் கூட அரசாங்கம் நாளாந்தம் போலியான தகவல்களையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

அந்நிய செலாவணி இருப்பு 3.1 பில்லியனிலிருந்து 2.3 பில்லியனாகக் குறைவடைந்துள்ளதாகக் கூறுகிறது. எஞ்சியுள்ள 2.3 பில்லியன்களில் சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட 10 பில்லியன் யுவான்களும் உள்ளடங்குகிறது.

யுவான்களை எவ்வாறு டொலராகக் கருத முடியும்? உண்மையில் அரசாங்கத்திடம் தற்போது 600 - 800 மில்லியன் டொலர் இருப்பு மாத்திரமே காணப்படுகிறது. இது எதிர்வரும் 3 வாரங்களுக்கான இறக்குமதிக்கு மாத்திரமே போதுமானதாகும்.

இந்த பிரச்சினைகளுக்கு பணத்தை அச்சிடுவதன் மூலம் தீர்வு காண முடியும் என்று அரசாங்கம் கருதுவது தவறாகும். வரையறையின்றி பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் அதிகரித்துச் செல்லும்.

அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் ஆஜன்டீனா மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளைப் போன்று சுமை கொண்டு செல்லும் வண்டியில் பணத்தைக் கொண்டு சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

உண்மையில் இலங்கை பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடாக மாற்றமடைந்துக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US