ரணிலின் சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற சஜித் தரப்பு
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார மாற்ற சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்ட மூலத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, உயர் நீதிமன்றத்தில் விசேட தீர்மான மனுவொன்றை இன்று(06) தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டமூலத்திற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு அங்கீகரிப்புக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரம் தேவை என அறிவிக்குமாறு கோரியே மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார ஆணைக்குழு
ரஞ்சித் மத்தும பண்டார தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, தற்போதைய சர்வதேச நாணய நிதிய ஏற்பாட்டில் உள்ள நிபந்தனைகள், உள்நாட்டு சட்டத்தின் உட்பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் 48வது சரத்து இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா எனப்படும் ஒரு நிறுவனத்தை நிறுவ முயல்கிறது.அதில் இயக்குநர்கள் குழு, தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் பொருளாதார ஆணைக்குழுவால் நியமிக்கப்படுவார்கள்.
எனினும் இன்வெஸ்ட் ஸ்ரீ லங்காவின் பங்குகளை யார் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் அதன் உறுப்பினர்கள் யார் என்பதை சட்டமூலம் குறிப்பிடவில்லை.
அத்துடன் இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா அமைப்பின் உறுப்பினர்களை மாற்றியமைப்பது மற்றும் பங்குகளை மாற்றுவது தொடர்பாக யோசனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |