எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை
எரிபொருள், எரிவாயு, மருந்துகள், உணவு மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் அம்பாந்தோட்டை பகுதிக்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள யோதகண்டிய போதி மகா விகாரை, நாக மகா விகாரை மற்றும் சித்துல்பவ்வ மகுல் மகா விகாரை ஆகியவற்றுக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, அங்குள்ள மகா சங்கத்தினர் எதிர்கொள்ளும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் என மக்கள் எதிர்பார்த்த போதிலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உரத் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இன்னும் முறையான தீர்வை வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில் உடனடியாக எண்ணெய், எரிவாயு, மருந்து மற்றும் உரங்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு உண்மையான நிவாரணத்தை வழங்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri