ட்ரம்பின் காலடிக்கு வரிசையாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள்: ஆட்டம் காணும் வளைகுடா நாடுகள்
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோ, அல்லது கையகப்படுத்துவதோ மூலம் உலக நாடுகளுக்கு எண்ணெய் வழங்கும் பிரதான சக்தியாக அமெரிக்காவை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ட்ரம்ப் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கனடா, வெனிசுலா, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்ப் முன்வைத்த அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும், அந்நாடுகளில் உள்ள பெரும் எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தொடர்புடையவை எனவும் கூறப்படுகிறது.
இந்த வளங்களை கையகப்படுத்தி, உலக நாடுகளை அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கச் செய்வதே அவரது நீண்டநாள் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இதன்படி, மேற்கூறப்பட்ட நாடுகள் மீது அமெரிக்கா பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், தற்போது ஈரானுடன் மேற்கொள்ளப்படும் அமைதி பேச்சுவார்த்தைகளும் பொருளாதார நலன்களை முன்னிறுத்திய ஒரு நுட்பமான அரசியல் அணுகுமுறையாகவே பார்க்கப்படுகின்றன.
இவ்வாறு திட்டமிட்ட வகையில் செயல்பட்டு வரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளை மேலும் ஆழமாக ஆராய்கிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri