ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையும் போர்க்கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் - ஈரான்
சர்வதேச அளவில் எரிசக்தி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் போர்க்கப்பல்கள் குறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையானது சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, சிவில் மற்றும் வணிகக் கப்பல்களின் 'தீங்கற்ற போக்குவரத்திற்காக' (harmless passage) திறந்துவிடப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இப்பகுதிக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு ராணுவக் கப்பல்களும் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை நெருங்கும் போர்க்கப்பல்கள் அனைத்தும் தாக்கி அழிக்கப்படும் அல்லது மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும் என ஈரான் புரட்சிகர காவல்படையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை அழித்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பதிலுக்கு ஈரான் உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் காட்டியுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன, இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri