மன்னாரில் சஜித்துக்கான ஆதரவை பட்டாசு கொளுத்தி தெரிவித்த மக்கள்
மன்னாரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (14.08.2024) அறிவித்திருந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகார பீடம் ஆகியன நேற்று மாலை கொழும்பில் கூடி ஏகமனதாக இந் தீர்மானத்தை எடுத்துள்ளது.
மக்களின் கருத்துக்கள்
மேலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்குச் சென்று மக்களையும் மாவட்ட பிரதிநிதிகளையும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
மக்களின் கருத்துக்களும் உயர் பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்தே, கட்சியின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள் மன்னார் சந்தை பகுதியில் பட்டாசு
கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
