நாட்டை மதங்களற்ற நாடாக மாற்ற அரசு முயற்சி –சஜித் குற்றச்சாட்டு
அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், அதனை புறக்கணித்து நாட்டை மதங்களற்ற நாடாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளர்ப்பதுடன், நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் சம உரிமையும் உரிய மரியாதையும் வழங்க வேண்டியது அதன் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நடைமுறையில் மத அடிப்படையிலான மரியாதையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பௌத்த தேரர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும், பிற மதங்களின் ஆன்மிக தலைவர்களுக்கும் உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத நல்லிணக்கத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையும் நாட்டின் சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.
அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் மத அடையாளங்களையும் கலாசார பாரம்பரியத்தையும் புறக்கணிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது நீண்ட காலத்தில் நாட்டை மதங்களற்ற அமைப்பாக மாற்றும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு தரப்பினரின் உரிமைகள் மற்றும் நம்பிக்கைகளை மதித்து பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும் என்பதையும், மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam