ராஜபக்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை - சஜித் அணி குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician President of Sri lanka
By Rakesh Feb 02, 2026 03:46 AM GMT
Report

தூய்மையான அரசியல் ஒன்றை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசில் இருப்பவர்கள், தற்போது நாளுக்கு நாள் ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டு வருகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிராேசன் பாதுக்க தெரிவித்துள்ளார். 

ராஜபக்ஷ குழுவுக்கும் அநுரகுமாரவின் குழுவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று (01.02.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை ஆட்சி செய்து வந்த அனைவரும் ஊழல் மோசடிக்காரர்கள் எனவும், தூய்மையான அரசியல் ஒன்றைக் கட்டியெழுப்ப அதிகாரத்தை வழங்குமாறும் தெரிவித்தே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் மக்கள் உணரும் வகையில் எதனையும் செய்யவில்லை.

ATM இயந்திரங்களை பயன்படுத்துபவர்கள் அவதானம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ATM இயந்திரங்களை பயன்படுத்துபவர்கள் அவதானம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அதேநேரம் அரசில் இருப்பவர்கள் நாளுக்கு நாள், ஊழல் மோசடி சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டு வருகின்றார்கள். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கறுப்புப் பட்டியலில் உள்ள நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வங்கிக் கடன் அட்டையைப் பயன்படுத்தி இந்தியாவில் வைத்து ஒரு மில்லியனுக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

ராஜபக்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை - சஜித் அணி குற்றச்சாட்டு | Sajith S Team Makes Public Accusations

அவ்வாறு இல்லை என்றால் முடியுமானால் அவர் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். ஊழல், மோசடி தொடர்பில் இவர்களுக்கும் ராஜபக்ஷ குழுக்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றதா எனக் கேட்கின்றோம். சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது முதல் தற்போது தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி வரை பாரியளவில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால் அரசு அனைத்து விடயங்களையும் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையையே கையாண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது டித்வா அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அனுராதபுரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 இலட்சம் ரூபா அடங்கிய காசோலையை ஜனாதிபதி கையளித்திருந்தார்.

ஆனால் அந்தக் காசாேலைகளைப் பெற்றவர்கள் வங்கியில் கொடுத்தபோது, அந்த வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை எனத் தெரிவித்து அந்தக் காசோலைகள் மீளப் பெறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு 17 காசோலைகள் மீளத் திருப்பப்பட்டிருக்கின்றன.

நேற்றிரவு அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை.. ட்ரம்பிடம் இருந்து பரபரப்பில்லா பதில்

நேற்றிரவு அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை.. ட்ரம்பிடம் இருந்து பரபரப்பில்லா பதில்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆனால் அனுராதபுரம் பிரதேச செயலாளர் இதனை நியாயப்படுத்தும் வகையில், காசோலை வழங்கப்பட்டவர்களின் காணியின் உண்மையான உரிமையாளர்கள் அவர்களா? மற்றும் இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை. அதனால் காசோலைகளை வங்கியில் இட வேண்டாம் என நாங்கள் தெரிவித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவுக்கும் அநுரவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை - சஜித் அணி குற்றச்சாட்டு | Sajith S Team Makes Public Accusations

பிரதேச செயலாளரின் கூற்றின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருப்பது அவர்களின் காணிகளின் உரித்து தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத, ஒப்பந்தம் செய்துகொள்ளாத காசோலையாகும்.

அப்படியானால் ஜனாதிபதி அதிகாரபூர்வமற்ற காசோலைகளையே வழங்கி இருக்கிறார். அனுபவம் இல்லாமையே இதற்குக் காரணமாகும். அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியாது என நாங்கள் ஜனாதிபதித் தேர்தலின்போதே தெரிவித்திருந்தோம். தற்போது அது உண்மையாகி வருகின்றது.

நல்லூர் ஆலயத்திற்குள் உலகக் கிண்ணத்தை கொண்டு சென்றவர்களின் நடவடிக்கையால் குழப்பநிலை

நல்லூர் ஆலயத்திற்குள் உலகக் கிண்ணத்தை கொண்டு சென்றவர்களின் நடவடிக்கையால் குழப்பநிலை

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக் கூரை தகரம் ஒன்றுக்கு 10 இலட்சம் வழங்குவதாக அறிவிப்பு செய்தபோது, அவரால் ஒருபோதும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டாேம். அதேபோல் ஜனாதிபதியின் அமைச்சர்கள் தற்போது ஊழல், மோசடியில் சம்பந்தப்பட்டு வருவதால், நாடு அராஜக நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
நன்றி நவிலல்

சுன்னாகம், London, United Kingdom

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Tellippalai, சென்னை, India

26 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US