தமிழினத்தின் அடுத்தகட்டம்: சுமந்திரனின் அறிவிப்பால் சூடுபிடித்துள்ள தேர்தல் களம்
13 ஆம் திருத்தத்தின் ஊடக தமிழ் மக்களுக்கு தீர்வு என யதார்த்தவாசம் பேசும் தமிழ் அரசியல் தரப்புக்களின் ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு என்பது மக்களின் நம்பிக்கையை சிதைக்க வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியில் சுயநிர்ணய உரிமையை வென்றாக வேண்டும் என்ற எண்ணக்கருவோடு தமிழர் பொதுக்கட்டமைப்பு என்ற நிலைப்பாட்டில் பொதுவேட்பாளர் நிலைநிறுத்தப்பட்டபின், பேரம் பேசும் அரசியலை தாண்டி எங்கள் நிலைப்பாடு இல்லை என்பதை வவுனியாவில் சுமந்திரன் முன்வைத்த கருத்தில் வெளிப்படையாகியிருந்தது.
முன்னதாக சுமந்திரன் கூறிய விடயம் யாதெனில், எழுத்துமூலமான ஒப்பந்தத்தை நாங்கள் எதிர்பார்க்கின்றேம். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்க வேண்டும் என்றார்.
எனினும் இதுவரை காலமும் வடக்குக்கான தீர்வென்பதை எழுத்துமூலமான ஒப்பந்தத்தின் ஊடக வழங்க எவரும் முன்வராதபோது சஜித் அதனை வாங்கினாரா?
13ஐ நடைமுறைப்படுத்துவோம் என சஜித் மாத்திரம் அல்லாது ராஜபக்சர்கள், ரணில் விக்ரமசிங்க, மற்றும் அநுர தரப்பினரும் கூறியிருந்தனர்.
ஆனால் அவை இதுவரை சாத்தியமாகவில்லை என்பதே நிதர்சனம். கடந்த முறை சமஸ்டியை ஆதரிப்பவருக்கே தமது ஆதரவென தமிழரசு கட்சி கூறியிருந்தது.
அப்படியானால் தமிழரசு கட்சியின் சுமந்திரன் ஆதரித்த சஜித் தரப்பு சமஸ்டிக்கு ஒத்துக்கொண்டதா? சுமந்திரன் கேட்ட எழுத்துமூல ஒப்பந்தத்தை வழங்கியதா?
இவ்வாறான பின்னணியில் தமிழினத்தின் அடுத்தகட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பற்றி ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் சேனன் முன்வைத்த கருத்துக்களை தொகுத்துவருகிறது தொடரும் ஒளியவனம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |