கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி வரியில் பாரிய மோசடி!
உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரி மூலம் பாரிய மோசடி இடம் பெற்றுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பனவற்றிற்காக விதிக்கப்பட்ட இறக்குமதி வரியின் ஊடாக விவசாயிகளுக்கு நலன்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரி விதிப்பானது சீனி வரி மோசடிக்கு நிகரான ஓர் மோசடி என உள்நாட்டு பெரிய வெங்காய விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் வரி விதிக்கப்பட்டாலும் அதற்கு முன்னரே பெருந்தொகை வெங்காயம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு களுஞ்சியபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தவறிய அரசாங்கத்தின் இயலாமையினால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமை, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல் போன்ற நாட்டில் விவசாயிகள் எதிர் நோக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



