துணைத் தலைவராக சாணக்கியனை முன்மொழிந்த சஜித்
திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக நானும் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர், இன்று (09) தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், "ஒன்றியத்தின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர், ஜகத் மனுவர்ண தெரிவு, பிரதி இணைத் தலைவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பத்தாவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்ட திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (08) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற ஒன்றியம்
இந்த ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக நானும் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேனவும் தெரிவு செயப்பட்டுள்ளோம். இதன்போது ஒன்றியத்தின் இணைத் தலைவராக அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேனவின் பெயரை, நாடாளுமன்ற உறுப்பினர் 6(வைத்திய கலாநிதி) ஜனக சேனாரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
எனது பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார வழிமொழிந்தார். அத்துடன், இந்த ஒன்றியத்தின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதி இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே, சந்தன சூரியஆரச்சி, எஸ். எம். மரிக்கார் மற்றும் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தை பொதுமக்களுக்கு நெருக்கமடையச் செய்வதற்கு இந்த ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பர்க்க்கின்றேன். அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை நல்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |