சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு

Kurunegala Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Uky(ஊகி) Aug 31, 2024 11:05 PM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in அரசியல்
Report
Courtesy: uky(ஊகி)

சஜித் பிரேமதாச வெற்றிக்குப் பின்னராக வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்திற்கு இரு நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களை நிச்சயமாக பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர் உள்ளனர். எனவே இரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை உறுதியாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று குருநாகல் மாவட்டட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர், குருநாகல் மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வது தொடர்பில் குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடல் குருநாகல் தனியார் ஹோட்டல் ஒன்றில் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் எம். டி. எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. 

கலந்துரையாடல்

இதன்போது அசோக அபேசிங்க தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த தேர்தலில் துரதிஸ்டவசமாக குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம் ஒருவர் மட்டும்தான் போட்டியிட்டார். ரிஸ்வித் ஜவஹர் போட்டியிட முடியாமற் போய் விட்டது.

சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு | Sajith Propaganda In Kurunegala

இம்முறை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இரண்டு உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும். 

நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கின்றேன். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் முஸம்மிலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 

தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும்படி நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதனைப் பழையமுறைப்படி விகிதாசாரத் தேர்தல் முறைப்படியே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக இரண்டொரு நாட்களில் புதிய அமைச்சரவைக் குழு நியமிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.அதன் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படும். பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு | Sajith Propaganda In Kurunegala

அத்துடன் நாங்கள் தலைவரிடம் நீதி மன்றத்திற்கு ஒரு கோரிக்கை விடுக்கப்படி கேட்டுள்ளோம். முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு முன் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது. அந்த தேர்தல் முறையினை மாற்றம் செய்ய வேண்டும்.

தற்போது அதன் வேட்பாளர்கள் 700 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். 25 பேர் மரணம் எய்தியுள்ளார்கள். வட்டாரத் தேர்தல் முறைப்படி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாறு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்த முடியாது. அது பழைய விகிதாசார முறைப்படிதான் நடத்தப்பட வேண்டும். இது பற்றிய விடயங்களை நீதி மன்றத்திடம் கோரிக்கை விடுத்து கால எல்லையை நீடிக்க வேண்டும் என்று தலைவரிடம் கேட்டுள்ளோம்.

வட்டாரத் தேர்தல் முறை

அந்த வகையில் இங்குள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

வட்டாரத் தேர்தல் முறையின் மூலம் நிறையப் பிரச்சினைகள் உள்ளன. ஒரு வட்டாரத்திற்கு பேட்பாளர் ஒவருவரை நியமிக்கும் போது வேறு கட்சி சார்பான ஒருவரை நியமிக்க முடியாத நிலை தோன்றுகின்றது.

எனது மிக நெருங்கிய நண்பர் அஸார்தீனை கூட வட்டாரத் தேர்தல் முறையினால் இணைத்துக் கொள்ள முடியாமற் போயிற்று. தெலியாகொன்ன பிரதேசத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்வி ஒரு பக்கத்தில் கேட்டார். மறுபக்கத்தில் எனது அயல் வீட்டு நண்பர் அஸார்தீனும் கேட்டார்.

தேர்தல் முறையை மாற்ற வேண்டும்

தேர்தல் ஆணைக்குழு அலுலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு கட்சியின் உதவிச் செயலாளர் என்ற வகையில் அங்கு சென்று இருந்தேன். சகல கட்சிகளும் வட்டாரத் தேர்தல் முறையினை மாற்றியமைக்க வேண்டும் என்று ஏகமானதாக ஒரு கருத்தை முன் வைத்தார்கள்.

சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு | Sajith Propaganda In Kurunegala

பொதுஜனப் பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி என சகல கட்சிகளும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையினை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். 

வெகு விரைவில் மாற்றம் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும். ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும், இறுதியாகத்தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும். 

குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்திற்கு மேல் முஸ்லிம் வாக்குகள் உள்ளனர். இதில் வெளிநாட்டுக்கும் பெரு எண்ணிக்கையானவர்கள் சென்றுள்ளார்கள்.

குருநாகல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கட்டுகம்பொல தேர்தல் தொகுதிய மறைந்த அலவி, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். அதில் 80 விகிதத்திற்கு மேலான வாக்குகள் வாக்குகள் கிடைக்கும்.

கடந்த பொது தேர்தலில் வைத்தியர் சாபி, எமது கட்சியில் போட்டியிட்டு 54 ஆயிரத்திற்கும் மேலாக வாக்குகளைப் பெற்றார். அவர் வைத்தியர் என்ற காரணத்தினால் சிங்கள வாக்குகளும் அவருக்கு கிடைத்திருக்கும். நஸீரும் தேர்தலில் போட்டியிட்டு 38 ஆயிரம் வாக்குகள் பெற்றார். 

தோல்வியடையாத வேட்பாளர் 

அசோக அபேசிங்க இதுவரையிலும் ஒரு பொதுத் தேர்தலிலும் தோல்வியடையாத நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மூன்று பொதுத் தேர்தலில்களிலும் தோல்வியடையாமல் வெற்றியடைந்துள்ளேன்.

சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு | Sajith Propaganda In Kurunegala

2010 , 2015, 2020 அந்தவகையில் கட்சியின் தலைவர் எனக்கு மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்கினார். நான் தான் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியில் முதல் பிரேரணையைக் கொண்டு வந்தேன். அதன் காரணமாக கட்சியின் அங்கத்துவம் இல்லாமற் செய்யப்பட்டது. தொகுதி அமைப்பாளர் பதவி இல்லாமற் செய்யப்பட்டது. 

அதேவேளையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்க வேண்டும் என்று முதலில் குருநாகலில் பெரும் கூட்டத்தை கூட்டி ஆதரவு தெரிவித்தேன்.

வெற்றி நிச்சயம்

இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்காக குருநாகலில் முதல் கூட்டம் எனது ஏற்பாட்டில் நடைபெற்றது. மக்கள் பெரு வெள்ளம். கூட்டம் முடிவடைந்ததுடன் முன்னாள் மாநகர சபை முதல்வர் துசார என்னுடன் தொலைபேசியில் சஜித் வெற்றியடைந்து விட்டார்.

இப்படியான சனக் கூட்டத்தை நான் குருநாகலில் காணவில்லை என்று கூறி தனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு | Sajith Propaganda In Kurunegala

ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் ஆளுநர் என்னைச் சந்திக்கும் போது முதல் இடத்தில் சஜித் பிரேமதாச உள்ளார். இரண்டாம் இடம் அநுர குமார திசாநாயகவுள்ளார். மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் கூறினார்.

அதன் பிறகு மகிந்த ராஜபக்சவின் செயலாளர் என்னுடன் உரையாடும் போது சஜித் பிரேமதாச 10 இலட்சம் வாக்கு அடிப்படையில் முன்னுக்கு இருக்கின்றார். இன்னும் கொஞ்சம் உற்சாகமாக வேலை செய்து கூட்டி கொள்ளுங்கள் என்றார். 

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவர். ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறுகிறார்கள் சஜித் பிரேமதாச முதலிடத்தில் உள்ளார் என்ற செய்தியைச் சொல்லி தாங்கள் எத்தனையாம் இடத்தில் உள்ளோம் என்பதையும் உறுதி செய்து கொள்கிறார்கள்.

அதிக செலவுகள்

நான்கு இலட்சத்துக்கு மேல் வாக்குகளையே அடிப்படை வாக்குகளாகக் கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி அதிகளவு செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சஜித்தின் வெற்றிக்கு பின்னர் குருநாகல் மக்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்: ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு | Sajith Propaganda In Kurunegala

வெற்றி பெறப் போவது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச. சஜித் வெற்றிக்கு யாரும் சவால்கள் இல்லை. அதற்காக நாங்கள் அயராது உழைக்க வேண்டும். ஒவ்வொரு வீடாகச் செல்ல வேண்டும். 

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மக்கள் விடுதலை முன்னிணியிடம் ஒப்படைக்கத் தயாராக இல்லை. அவர்களால் ஆறு மாதங்கள் கூட செய்ய முடியாது. வெற்றி பெறவும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றார்கள்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் விழா ஏற்பாட்டாளர் அஇமகா குருநாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் முன்னாள் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அஸார்தீன் மொய்னுதீன், குளியாப்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் இர்பான், முன்னாள் பொல்கவெல பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன், ரிதிகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அஸாட் நஸீர், மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பரத் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பரத் திருவிழா

யாழில் இடம்பெற்ற சஜித்தின் பிரசார கூட்டம்: விரக்தியில் திரும்பி சென்ற மக்கள்!

யாழில் இடம்பெற்ற சஜித்தின் பிரசார கூட்டம்: விரக்தியில் திரும்பி சென்ற மக்கள்!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US