ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அணு ஆயுதங்களைக் கொண்ட வெளிநாட்டு கப்பல்
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு ஆயுதங்களைக் கொண்ட வெளிநாட்டுக் கப்பலொன்று வந்துள்ளமை பற்றிய தகவல் குறித்து உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அணுவாயுத அதிகார சபையின் அனுமதியின்றி நேற்றைய தினத்தில் இவ்வாறான கப்பல் வருகை தந்திருக்கிறது.
குறைந்த பட்சம் அந்த கப்பல் பரிசோதனைக்குக்கூட உட்படுத்தப்படவில்லை.
அதற்கமைய உடனடியாக விசாரணை நடத்தி தகவல்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, குறித்த சீனக் கப்பலை உடனடியாக வெளியேறும்படி இலங்கை அணு ஆயுத மற்றும் மின்சக்தி நிர்வாக ஆணைக்குழு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam