வெடிப்புகளை நிறுத்த வந்து, வெடிப்புக்களை நிகழ்த்தும் இலங்கை அரசாங்கம் (Video)
இலங்கையில் வெடிப்புகளை நிறுத்தப்போவதாக பதவிக்கு வந்த, நடப்பு அரசாங்கத்தின் காலத்தில் இன்று வெடிப்புக்கள் நிகழ்ந்துக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அக்ராசன உரை தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெறும் ஒத்திவைப்பு விவாதத்தில் இன்று உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின்போது, வெடிப்புக்களை நிறுத்தப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்தது. எனினும் இன்று நாட்டில் பல்வேறு இடங்களிலும் எரிவாயு, அரசியல், மக்கள், மற்றும் அரசாங்கத்துக்குள் வெடிப்புக்கள் நிகழ்வதாக குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விற்பனை செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அரசாங்கம், தமது ஆட்சியில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
எனினும் இன்று இராணுவப் பாதுகாப்பில் நாடு உரிய இலக்கை அடையவில்லை.
பொரளை தேவாலயத்தில் இடம்பெற்ற கைக்குண்டு சம்பவம் இதற்கு ஒரு உதாரணமாகும் என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
பூகோள அரசியலில் இன்று இலங்கை முக்கிய ஆதிக்க களமாக மாறியுள்ளது.
இந்தநிலையில் இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு உதவியளிக்கும் போது தமது கருத்தையும் பெற்றுக்கொண்டதாக சஜித் தெரிவித்தார்.
இதன்போது பொதுமக்கள் லாபம் கருதி, நாட்டுக்கு கிடைக்கவேண்டிய இந்திய உதவியை தாம் தடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்பெய்ன் நாட்டின் காளைகளை அடக்கும் போது காட்டப்படும் சிவப்பு துண்டு போகும் இடமெல்லாம், குறித்த காளை செல்வது போன்றே, இலங்கை அரசாங்கம் கொள்கைகளை கடைப்பிடிக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
