பெல்வத்த - செவனகல சீனி தொழிற்சாலைகள் நெருக்கடியில்.. சஜித் வெளியிட்ட தகவல்
பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெல்வத்த சீனி தொழிற்சாலை இலங்கை வங்கியில் 2024 ஒகஸ்ட் மாதம் ரூ. 5000 இலட்சம் மற்றும் நெவம்பர் மாதம் பத்து இலட்சமும் கடன் பெற்றுள்ளது.
அத்தோடு சம்பளம் வழங்குவதற்காகவும் கடன் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திட்டம்
மேலும் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய பணம் ரூ.3000 இலட்சம், விநியோகத்தர்களுக்கு ரூ.4000 இலட்சம் கொடுப்பட வேண்டும். அத்தோடு செவனகல சீனி தொழிற்சாலை விவசாயிகளுக்கு ரூ.2000 இலட்சமும் விநியோகத்தர்களுக்கு 10 இலட்சமும் வழங்க வேண்டியுள்ளது.
செவனகல சீனி தொழிற்சாலை அரசுக்கு வட் வரியாக 4000 இலட்சம், இலங்கை வங்கிக்கு ரூ.2000 இலட்சம் கடனும் செலுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வை முன்வைத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நட்டத்தில் இயங்கும் செவனகல-பெல்வத்த சீனி தொழிற்சாலைகளை இலாபத்தில் இயக்குவதாக பெரும் சவால் விட்டது.
பின்னர் சிறுதொழில் முயற்சி பிரதியமைச்சர் கடந்த அரசில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த கொடுப்பனவுகளை செலுத்தி ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்ததாகவும் எத்தனோல் விற்பனையில் இலாபம் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கரும்பு செய்கையில் புதிய விவசாயிகளை ஈடுபடுத்தி தொழிற்சாலைகளை முன்னகர்த்தி செல்வதாக கூறிய அரசாங்கத்தின் திட்டம் நடைமுறை சாத்தியமாகவில்லை என்தை இன்றைய நிறுவனங்களின் நெருக்கடியில் தெளிவாகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




