சஜித் பிரேமதாச முக்கிய இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முக்கியமான மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் சந்திப்பு நடாத்தியுள்ளார்.
கொழும்பு 7ல் அமைந்துள்ள விசேட இடமொன்றில் இராப்போசன விருந்தொன்றுடன் இந்த சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளது. சீனத் தூதுவருடன் சஜித் மேற்கொண்ட சந்திப்பு குறித்து மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
தனது பாடசாலை அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு சீனா உதவி வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது என சஜித் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு மேற்குலக நாடுகளின் தலைவர்களும் உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர்.
உதவி வழங்கப்பட வேண்டிய பாடசாலைகளின் பெயர் விபரங்களையும் தூதுவர்கள் கோரியுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக பல அரசியல் ரீதியான விடயங்கள் பற்றி இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐந்து முக்கிய தூதுவர்களுடன் இந்த சந்திப்பு நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
