மொட்டு எம்.பிக்களை இணைத்துகொண்டு பாரிய கூட்டணி: சஜித்தின் புதிய வியூகம்
மொட்டு கட்சியில் அதிருப்தியடைந்த எம்.பிக்களை இணைத்துக்கொண்டு பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு சில நாட்களுக்கு முன் மொட்டுக் கட்சியின் முக்கிய எம்.பி. ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வாறு அவர் தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளதன் நோக்கம், அவருடன் சேர்ந்து 15 எம்.பிக்கள் அரசுடன் அதிருப்தியடைந்திருப்பதாகவும், எதிர்க்கட்சியில் இணைவதற்குத் தயாராக இருப்பதாகவும் சஜித்திடம் தகவல் சொல்வதற்கே.

விரைவில் பாரிய கூட்டணி
"சேர்... உங்களது கட்சியில் இணைய முடியுமா...? என்று சஜித்திடம் அவர் கேட்டுள்ளார்.
"முடியும். விரைவில் பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கப் போகின்றோம். அதில் இணையுங்கள். ஏற்கனவே மொட்டில் இருந்து விலகிய 13 எம்.பிக்கள் சுயாதீனமாக இயங்குவதோடு எம்மோடும் சேர்ந்து செயற்படுகின்றார்கள். அவ்வாறு நீங்களும் செயற்பட முடியும்" என்று சஜித் பதிலளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam