தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச
தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று (24.10.2022) எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சஜித்தின் வாழ்த்து செய்தி
தீபாவளிப் பண்டிகையை உலகிற்கு இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகவும், அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.
புராதன இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட சமூக நல்லிணக்கம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவன்றின் ஒருமித்த நாளாக தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது.
மக்களின் நல்லிணக்கம்
மேலும் இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி, மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும், நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ தீபத்திருநாள் அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.மனோகணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ்
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா
பிரேமதாஸா மனைவி, கனேடிய உயர்ஸ்தானிகரத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.