அனோஜன் பேசியதை அரசியலாக்கிய சஜித் - ஜனாதிபதி சந்திப்பில் நடந்தது என்ன..!
ஜனாதிபதியை சந்தித்த பின்னர்தான் அனோஜனின் குடும்பத்தார் நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அநுர குமார திஸாநாயக்க சில வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கிறார் என சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனோஜன் தொடர்பான பிரச்சினைகளை சஜித் தான் அழைப்பு மூலம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார். அதன் பின்னர் தன்னை அலுவலகத்தில் சந்திக்குமாறு குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, அவரை சந்தித்தோம், அவரும் அனோஜனிடம் தொலைபேசியின் ஊடாக பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு, அரசியலாக்கப்படும் என எங்களுக்கு தெரியாது.
மாறாக, அனோஜனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைப்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதேபோன்று, குடும்பத்தினரால் வழங்கப்பட்ட 19 இலட்சம் ரூபாய் பணமும் அவர்களுக்கு திரும்ப வழங்கப்படவுள்ளதாக விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தவொரு பிரச்சினையை வைத்து சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பேசுவது வருத்தமாக இருக்கின்றது என்றார்.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam