பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் முன்மொழிவு
அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட பெயரை நாளை (15) கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க சஜித் மறுப்பு
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டலஸ் அழகப்பெருமவின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
எனினும் இந்த கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துவிட்டதாக ஐக்கி மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.