கோட்டாபய பதவி விலகிவிட்டதாக கருத முடியாது! பேராசிரியர் வெளியிட்டுள்ள கருத்து
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை கைவிட்டதாக கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தனது சேவையை கைவிட்டதாக கருதுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என பேராசிரியர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றின் விசேட கலந்துரையாடலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரையில் சபாநாயகரிடம் ஒப்படைக்கவில்லை.
இதனால் ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகியதைப் போன்று நடத்துவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளதா என்பதை ஆராய்வதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பேராசிரியர் பிரதீபா மஹாநாம ஹேவாவிடம் கேட்கப்பட்டபோதே, தொழிலாளர் சட்டம் தொடர்பான ‘Vacation of Post’ வழங்குவதை இங்கு பயன்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.