யாழில் மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்
யாழ்ப்பாணம் (Jaffna), சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து கையளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த மாணவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மணிக்கணக்காக காக்க வைத்துள்ளார்.
சஜித் பிரேமதாச (Sajith Premdasa) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்.
அந்தவகையில், இன்றையதினம் (12.06.2024) பி.ப 2.00 மணியளவில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து கையளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அப்பாடசாலையின் மாணவர்கள் இரண்டு மணிக்கு முன்னர் நிகழ்வுக்கு தயாராக இருந்தனர்.
சோர்வடைந்த மாணவர்கள்
இருப்பினும் ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.
இதனால் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்திருந்ததை அவதானிக்க
முடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |