நாட்டு மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிப்பேன்: சஜித் உறுதி
நாட்டு மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிக்க நவடடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
சனசக்தி வறுமை ஒழிப்புத் திட்டத்தை விடவும் காத்திரமான வறுமை ஒழிப்புத் திட்டமொன்று இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல் (Kurunagala) ஹிரியாகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆண்டின் இறுதி தீர்மானம்
இந்த திட்டத்தின் ஊடாக வறிய மக்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இறுதியில் நாட்டில் திருப்பு முனையான தீர்மானம் எடுக்கப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் நாட்டின் 220 இலட்ச மக்களின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைவரையும் அபிவிருத்தியின் பங்குதாரர்களாக மாறக்கூடிய பொருளாதார வளர்ச்சியின் நலன்கள் அனைவருக்கும் செல்லக்கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |