இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சஜித் - செய்திகளின் தொகுப்பு
கொள்கை வகுப்பதிலிருந்து நாட்டின் தலைமைத்துவம் வரை இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் கொள்கை பிரகடன வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதமின்றி இளைஞர்களுக்காக, யாருக்கும் அடிமைப்படாது, அடிபணியாது, சுதந்திரமான சமூக வாழ்க்கைக்குள்ளும், ஜனநாயக வாழ்க்கைக்குள்ளும், நுழைவதற்கும் தன்னம்பிக்கையோடும், சுயமாகவும் எழுந்து நின்று கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம்.
நாட்டின் கொள்கை திட்ட தயாரிப்பின் போது முன்னோடிகளாக இளைஞர்களை நியமித்து, தற்காலத்திலும் எதிர்காலத்திலும் பொறுப்புக்களை ஏற்கக் கூடிய தலைவர்களாக மாறுவதற்கான சூழ்நிலைக்குள் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்.
நாம் ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்குவோம் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
