சஜித் கை கோர்த்தாலும் எமது அரசை அசைக்க முடியாது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றாகக் கைகோர்த்தாலும் எமது தேசிய மக்கள் சக்தி அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் சாத்தியமான அரசியல் கூட்டணிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்த பழைய அரசியல் கலாசாரத்தை நிராகரித்தே மக்கள் தற்போதைய அரசுக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆதரவு
மக்களின் இந்த ஆதரவை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத அச்சத்தினாலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் இணைவது குறித்துப் பேசி வருகின்றனர்.

பழைய தலைவர்களும் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகளும் மீண்டும் ஒன்றாக இணைந்தாலும், மக்களுக்காகச் செயற்படும் எமது அரசை ஒருபோதும் கவிழ்க்கவோ அல்லது அசைக்கவோ முடியாது எனக் குறிப்பிட்டார்.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan