கட்சிக்குள் பலத்த சவால்களை எதிர்கொள்ளும் சஜித் : வெளியாகியுள்ள தகவல்கள்

Colombo Parliament of Sri Lanka SJB Sajith Premadasa
By Ajith Jan 20, 2025 08:13 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தொடர்ந்தும் சிக்கல்களில் இருந்து மீள முடியாதுள்ளது.

ஏற்கனவே கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு அப்பால், கட்சியின் ஆலோசகர் ஒருவர், பணக்கார தொழிலதிபர்களுக்கு தேசிய பட்டியலில் இடம் அளிப்பதாக வாக்குறுதி அளித்து மில்லியன் கணக்கான ரூபாய்களை சம்பாதித்ததாக வலுவான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறுகிறது.

பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார அரிசி வியாபாரி, தமக்கு ஒரு இடத்தைப் பெறுவதற்கு மிகப்பெரிய அளவில் 500 மில்லியன் கொடுத்ததாக கட்சியின் தலைமையிடம் முறையிட்டுள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ். பொலிஸ் நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

சஜித் பிரேமதாசவுக்கு அழுத்தம்

அவருக்கான தேசியப்பட்டியல் இடம் கிடைக்காதபோதே இந்த விடயம் கசிந்துள்ளது.

கட்சிக்குள் பலத்த சவால்களை எதிர்கொள்ளும் சஜித் : வெளியாகியுள்ள தகவல்கள் | Sajith Faces Problems Within Sjb

நாடாளுமன்ற ஆசனத்தைப் பெறுவதற்கு பணம் கொடுத்த முறைப்பாட்டை வழங்கிய மற்றொருவர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராவார் இருப்பினும், அவர் பணம் செலுத்தப்பட்ட தொகையைவிட பெரிய தொகை என்று கூறினாரே தவிர, அவர் அது எவ்வளவு தொகை என்று குறிப்பிடவில்லை.

இந்தநிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சி அத்தகைய நிதியைப் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) அழுத்தம் கொடுக்கப்படுவதாக கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்

இலங்கை வந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்

குற்றச்சாட்டுக்கள்

ஏற்கனவே கட்சியில் தலைவர் பதவி குறித்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் பிரேமதாசவைப் பொறுத்தவரை, மோசமான தருணத்தில் இந்த பிரச்சினையும் சேர்ந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கட்சிக்குள் பலத்த சவால்களை எதிர்கொள்ளும் சஜித் : வெளியாகியுள்ள தகவல்கள் | Sajith Faces Problems Within Sjb

இதற்கிடையில் தற்போது தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் கட்சியின் செயற்குழுவில் சஜித் பிரேமதாச கடும் ஆட்சேபனைகளை எதிர்கொண்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் அவர் எடுக்கின்ற முடிவுகள், அவரது தந்தை ரணசிங்க பிரேமதாச, தனது ஜனாதிபதி காலத்தில் நடத்திய தனி மனிதர் நிகழ்ச்சியை போன்றது என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமிட் திட்ட மோசடி : நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்ட மத்திய வங்கி

பிரமிட் திட்ட மோசடி : நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்ட மத்திய வங்கி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US