முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: நாடாளுமன்றில் சஜித் வெளியிட்ட தகவல்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் லகியமைக்கான காரணம் தொடர்பில், சுயாதீன விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம்(03.10.2023) நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
''முல்லைத்தீவு நீதிபதிக்கு சில தரப்பினரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உத்தரவை மாற்றியமைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
சுயாதீனமான விசாரணை
இது, நீதிமன்றின் சுயாதீன தன்மையை பாதிக்கும் விடயமாகும். அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்து, வெளிப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
