சிறைக்குள் நடந்த கொடூரங்கள்: அரசை சாடிய சஜித் - உயிரிழப்புகளுக்கு தொடர் கண்டனம்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Negombo Sri Lanka Government NPP Government
By Rakesh Jul 08, 2026 06:36 AM GMT
Report

சிறைச்சாலைக்குள்ளே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத இந்த அரசு, நாட்டின் 220 இலட்சம் மக்களின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கொடூர மோதல் சம்பவங்கள் குறித்து நேற்று(07.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் கைப்பற்றிய இரண்டு துப்பாக்கிகளும் மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் கைப்பற்றிய இரண்டு துப்பாக்கிகளும் மீட்பு

சிறைக் கைதிகளின் அவலநிலை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விளக்கமறியலில் இருந்தாலும் அல்லது தண்டனைக் கைதிகளாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அரசின் பொறுப்பிலேயே உள்ளனர்.

கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பும் அரசுக்கே உரியது எனத் தற்போதைய ஜனாதிபதியே அன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பிரஸ்தாபித்திருந்தார். தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 27 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிறைக்குள் நடந்த கொடூரங்கள்: அரசை சாடிய சஜித் - உயிரிழப்புகளுக்கு தொடர் கண்டனம் | Sajith Criticizes The Government Negombo Incident

ஜனாதிபதியின் அன்றைய கூற்றுப்படி, இதற்கான முழுப் பொறுப்பையும் தற்போதைய அரசே ஏற்க வேண்டும். கைதிகள் அரசின் பொறுப்பில் உள்ளமையால் அவர்களின் உயிர் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு என்ற ஜனாதிபதியின் கூற்றை நீதி அமைச்சர் ஏற்றுக்கொள்கின்றாரா? இல்லையா?

அரசமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தின் அடிப்படை உரிமைகளின் பிரகாரம், எந்தவொரு நபரையும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது அவமதிப்பான நடத்துகைக்கோ, தண்டனைக்கோ ஆளாக்கக் கூடாது.

76 வருட சாபத்தை ஒழித்து, “வளமான நாடொன்றையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம்” எனக் கூறி சிறைச்சாலைத் துறையில் புதிய முறைமையைக் கொண்டு வந்துள்ளதாக இந்த அரசு பிரசாரம் செய்தது.

ஆனால், நீர்கொழும்பில் நடந்த கொடூர சம்பவத்தின் மூலம் தற்போதைய கொள்கைப் பிரகடனம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதுடன், முறைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாகின்றது.

சிறைக்குள் நடந்த கொடூரங்கள்: அரசை சாடிய சஜித் - உயிரிழப்புகளுக்கு தொடர் கண்டனம் | Sajith Criticizes The Government Negombo Incident

சிறைச்சாலைத் துறையில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடமிருந்தாலும், தற்போது சுமார் 40 ஆயிரம் பேர் வரை அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. நாட்டின் சிறைச்சாலைகளின் நெரிசலைத் தீர்ப்பது குறித்து நீதி அமைச்சர் எப்போதாவது ஆராய்ந்தாரா?

இந்த இடநெரிசல் குறித்து குறைந்தபட்சம் ஓர் அபாய மதிப்பீடாவது செய்யப்பட்டதா? முந்தைய ஆட்சிக் காலங்களில் நடந்த மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைச் சம்பவங்களில் இருந்து கூட இந்த அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

இதுவரை ஒரு நிரந்தர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தைக் கூட நியமிக்க இவர்களால் முடியாமல் போயுள்ளது.

நீதியரசர்களின் வயது எல்லை அதிகரிப்பு

எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் நீதி அமைச்சரால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கூட சரியாகக் கூற முடியாமல் போனது ஆச்சரியமளிக்கின்றது.

இந்தச் சம்பவம் நடந்த பின்னர் ஆரம்ப அறிக்கை ஏதேனும் பெறப்பட்டதா என்பது கூட சந்தேகமாகவே உள்ளது. தேசிய பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இன்று அதையும் செய்ய முடியாமல் போயுள்ளது.

சிறைக்குள் நடந்த கொடூரங்கள்: அரசை சாடிய சஜித் - உயிரிழப்புகளுக்கு தொடர் கண்டனம் | Sajith Criticizes The Government Negombo Incident

நீதி அமைச்சர் இந்த நாட்களில் சிறைச்சாலை நெருக்கடிகளைப் பற்றி ஆராய்வதை விட, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து, நீதிமன்றக் கட்டமைப்புக்கு அழுத்தம் பிரயோகிக்கவே முயற்சித்து வருகின்றார். உயர் நீதிமன்றங்களில் நீதியரசர்களுக்குப் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அவற்றை நிரப்ப முனையாமல், தங்களுக்குச் சாதகமான விடயங்களை ஆராய்வதால் நீதி அமைச்சருக்குத் தனது உண்மையான பொறுப்பு மறந்து போயுள்ளது.

இனிமேலாவது அரசு தங்களது “வளமான நாடு, அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தை முழுமையாக வாசித்து, அதனைச் சரியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.    

நடுவானில் திடீரென மாயமான விமானம்! துண்டிக்கப்பட்டுள்ள தொடர்புகள் - பல மணிநேரம் தொடரும் தேடுதல்

நடுவானில் திடீரென மாயமான விமானம்! துண்டிக்கப்பட்டுள்ள தொடர்புகள் - பல மணிநேரம் தொடரும் தேடுதல்

தவறான வழியில் செல்லும் அநுர அரசாங்கம்! சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்

தவறான வழியில் செல்லும் அநுர அரசாங்கம்! சஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ள நாமல்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US