பலஸ்தீனியர்களை ஆதரிப்பதை விரும்பாத அரசாங்கம்: கடுமையாக சாடிய சஜித்
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டிய இளைஞனை கைது செய்த தரம் குறைந்த அரசியல் கலாசாரத்திற்கு ஒத்துழைக்க வேண்டாம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசிங்கம் மக்கள் சேவை செய்வதில் சிறந்தவர்கள் என பெரும்பாலான மக்கள் கருதினர். ஆனால், அவர்கள் பொய் கூறுவதிலேயே சிறந்தவர்களாக உள்ளனர்.
தரம் குறைந்த அரசியல் கலாசாரம்
பலஸ்தீன தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அத்துடன், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டிய இஸ்லாமிய இளைஞனையும் அவர்கள் கைது செய்தனர். இவ்வாறான தரம் குறைந்த அரசியல் கலாசாரத்திற்கு ஒருபோதும் ஒத்துழைக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
