நாடாளுமன்றத்திற்கு சால்வை அணிந்து சென்றதன் காரணத்தை வெளிப்படுத்திய சஜித்
உலகளாவிய அமைதிக்கான அழைப்பின் வெளிப்பாடாகவே கறுப்பு மற்றும் வெள்ளை சால்வை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அவர் இன்றையதினம் (07.12.2023) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கறுப்பு மற்றும் வெள்ளை சால்வை அணிந்து வருகை தந்திருந்தார்.
தாம் இந்த சால்வை அணிந்து வந்தபோது, பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறேனா அல்லது இஸ்ரேலை ஆதரிக்கிறேனா என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிடம் கேட்டதாக சஜித் குறிப்பிட்டார்.
எனினும் தாம் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவில்லை என்றும் உலக அமைதிக்கு அழைப்பு விடுப்பதற்காக தாம் சால்வையை அணிந்து வந்ததாக சஜித் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என்ற இரண்டு தரப்பையும் பலர் ஆதரிக்கின்றனர் எனினும் இரு தரப்பு கொலைகளையும் கண்டிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசா நெருக்கடிக்கு இரு நாடுகளின் தீர்வு இருக்க வேண்டும் என்பதும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டும் இணைந்து வாழ வேண்டும் என்பதும் தன்னுடைய கருத்து என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
