இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்: சஜித் உறுதி
இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளும், முரண்பாடுகளுக்கும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மகளிர் மாநாடு, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின்பண்டார, இம்ரான் மஹ்ரூப், ஹிருணிகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பெண்களின் பங்களிப்பு
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,
இந்த வருட இறுதியில் எங்கள் ஆட்சியில் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
பெண் சக்தியை அதிகரித்து, பெண்களை வலுவூட்டி பெண்களின் பங்களிப்புடன் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை இந்த வருட இறுதிக்குள் செயற்படுத்தவுள்ளேன்.
பெண்கள் தலைமைதாங்களும் குடும்பங்களுக்கு சிறப்பு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெண்களுக்கான திட்டங்களையும் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும் திட்டத்தினை நான் செயற்படுத்துவேன்.
இலங்கையில் வறுமை வீதம் அதிகரித்துச் செல்கின்றது. இதற்காக பெண்கள் ஊடாக நிதிகளை ஒதுக்கி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வறுமையினை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |