ஆட்சியை பாதுகாத்து முறையான அரசாட்சியை முன்னெடுத்தே தீருவோம்: சஜித் உறுதி
அரசமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாத்து, நல்லாட்சியை முன்னெடுக்கின்ற வகையில் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ரஜ மகா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஒற்றுமை பலம்
"ஒற்றுமையே நாட்டின் மிகப் பெரிய பலமாகும். எனவே இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதங்களின்றி ஒற்றுமையோடு முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அத்தோடு நாட்டின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் முறையாகவும் நியாயமாகவும் இடம்பெறும்.
சரியான வழிமுறையை கையாளும் போது எவருக்கும் திருட முடியாது. கொள்முதல் முறை இல்லாத காரணத்தால்தான் அதிகமான மோசடிகள் இடம்பெறுகின்றன.
அதனால் சரியான நடைமுறைகளைக் கையாண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அவசர நிலைமைகளின்போதும் இடம்பெறுகின்ற கொள்முதல் முறைகளில் இருந்து விலகிப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமையால், கடந்த காலங்களில் பெருந்தொகையான நிதி மோசடி இடம்பெற்றிருக்கின்றன.
வி.எப்.எஸ்.போன்ற கொடுக்கல் - வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri