ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சஜித் வலியுறுத்து
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் சபாநாயகரிடம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
"நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும். அதற்கான உத்தரவாதத்தை அவர் இன்னும் வழங்கவில்லை.
சபாநாயகர்
நடுநிலையாகச் செயற்பட வேண்டும். மனுஷ விவகாரத்தில் தற்போதைய சபாநாயகர் மௌனம்
காக்கின்றார்.
மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும். சபைக்குள் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அரச
வன்முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றார்.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam