அரசுக்கு எதிராக போராட்டம்: சஜித் அணி தீர்மானம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுக்கு எதிராக பாரியதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(28) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
போராட்டம்

இதன்போது சமகால அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
இதற்கமைய தற்போதைய அரசை விரட்டுவதற்கு பாரியதொரு வேலைத்திட்டம் அவசியம் எனவும், அதனை உருவாக்க பிரதான கட்சிகளுடன் எதிர்வரும் 6 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்துக்கு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்

எனினும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை
நடத்தாதிருக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan