நாட்டுக்காக போராடியவர்கள் சிறைச்சாலைக்குள்! வன்முறையை தூண்டிய ராஜபக்சர்கள் வெளியே: சஜித் ஆதங்கம்
"வன்முறையை உருவாக்கிய ராஜபக்சர்களும், கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர். இந்நாட்டு மக்களுக்காக சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்." என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர், சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டக்காரர்களை சிறைச்சாலைக்கு நேற்று(26) நேரில் சென்று சந்தித்து சுகநலம் விசாரித்துள்ளார்.
வன்முறை
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,"போராட்டத்தின் நோக்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன அந்த நோக்கங்களுடன் மாற்றமின்றி பயணிக்கின்றன.
ராஜபக்ச வாதம்
காட்டுமிராண்டித்தனமான ராஜபக்ச வாதம் மற்றும் அரச பயங்கரவாதம் என்ற இரண்டையும் நிராகரிக்கின்றோம்.
வன்முறையைத் தூண்டிய ராஜபக்சர்கள் வெளியே. ஆனால், நாட்டுக்காகப் போராடியவர்கள் உள்ளே. இந்த அணுகுமுறையை அனுமதிக்க முடியாது. இந்த கையாலாக அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும்.
அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும். அரசைத் தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி நிலை! சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
