சஜித் பிரேமதாசாவின் “பிரபஞ்சம்” செயற்திட்டம் மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்த நாட்டின் இளைய தலைமுறையைத் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணணி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாகக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் ஆரம்பிக்கப்பட்ட “பிரபஞ்சம்”செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மன்/எருக்கலம் பிட்டி மத்திய மகளிர் மகாவித்தியாலயத்தில் வைபவ ரீதியாக இன்றைய தினம் (08) மதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
மற்றும் விருந்தினர்களாக முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ரிஸாட்பதியுதீன் முன்னால் இராஜங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
புத்திக்க பத்திரன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் வடமாகாண இணைப்பாளர் உமா
சந்திர பிரகாஸ், வவுனியா இணைப்பாளர் ரசிக்கா, முன்னால் மாகாண சபை உறுப்பினர்
ரிப்கான்பதியுதீன் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து
கொண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.



