கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பும் சஜித் மற்றும் மனைவி
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ இன்று வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பவுள்ளனர்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளனர்.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் சஜித்திற்கு கோவிட் தொற்று உறுதியாகியது. அதற்கு முதல் நாள் அவரது மனைவிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இருவரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இருவரும் குணமடைந்துள்ள நிலையில் இன்று வீடு திரும்பவுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
