சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதுவில் நடத்தப்பட்டுள்ள இரத்ததான முகாம்!
ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது- ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இரத்ததான முகாம், மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்று(27.12.2025) காலை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமாகியுள்ளது.
குருதிக்கொடை நிகழ்வு
இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம் அதிகம் கலந்து கொண்டு இரத்தத்தினை தானம் செய்தாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத பேதமின்றி சகலரும் குருதிக்கொடை வழங்குமாறு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இரத்ததானம் வழங்கக்கூடியவர்கள்,
அஸ்வர் (0774804316)
நஸீர் (0776968676)
ஜெமீன் (0779000771)
ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குருதிக்கொடை வழங்கும் பெண்களுக்காக பிரத்யேக இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


