முக்கிய பொறுப்பை ஏற்க நாமலுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு! பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பொறுப்பை ஏற்க முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.
கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்குமாறு நாமல் ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது தோற்றம் பெற்றுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுக் கொள்ளப்படும்.
அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி தற்காலிகமாகவே வெற்றி பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam