சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்து முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் விசாரணை
சட்டவிரோதமான முறையில் சொத்து குவிக்கப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர்களான சாகல ரட்நாயக்க, மனுஷ நாணயக்கார மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் இந்த முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிகளின் போது சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறைசார் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஏற்கனவே சில முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கான வருமானம் கிடைக்கப் பெற்ற வழிமுறைகளை வெளிப்படுத்த தவறும் அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்கி அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
