வடக்கிழக்கில் இடம்பெற்ற தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம்(Photos)
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினை வெளியேறக்கோரியும் வடகிழக்கு இணைந்த தீர்வினை தமிழர்களுக்கு வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக அன்னை பூபதி உண்ணாவிரதமிருந்தார்.
அவரது போராட்டம் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில் 19-04-1988ம் தினம் உண்ணாவிரதத்தின்போது உயிர்நீர்த்தார்.
அவரது நினைவுத்தினமான இன்றையதினம் நாட்டின் வடக்கிழக்கு பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சில பகுதிகளில் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க சென்றவர்கள் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு
காந்திய வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்த்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினமான இன்று நினைவுதினத்தினை அனுஸ்டிக்கச்சென்றவர்கள் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு,நாவலடியில் உள்ள அவரின் சமாதியில் நினைவு தினத்தை அனுஸ்டிக்கச்சென்றவர்களை பொலிஸார் திருப்பியனுப்பிய சம்பவம் இன்று நடைபெற்றது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனின் கைகளிலிருந்த கற்பூரத்தினையும் தட்டுவிட்ட பொலிஸார் அவர்களை அங்கிருந்துசெல்லுமாறு கடும் தோனியில் எச்சரித்துள்ளனர்.
வவுனியா
அன்னை பூபதியின் 34வது ஆண்டு நினைவு தினம் வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்று (19) அனுஷ்ட்டிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர் அஞ்சலி நிகழ்த்தபட்டது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு மாணவர்களால் மலரஞ்ஞலி செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து பேரணியாக ஈகைச்சுடரேற்றி 1நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைதொடர்ந்து அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது கட்சி உறுப்பினர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு
மலரஞ்ஞலி செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி 1நிமிட அகவணக்கமும்
செலுத்தப்பட்டது.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
