டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த அஸ்வின்! தமிழில் பாராட்டிய சச்சின்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 450 விக்கெட்டுகள், 3000 ரன்கள் எடுத்த 3ஆவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3 ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதனையடுத்து அஸ்வினுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் 'அற்புதமான மைல்கல்.. வாழ்த்துக்கள் ரவிச்சந்திரன்' என பதிவிட்டுள்ளார்.
அற்புதமான மைல்கல்!
— Sachin Tendulkar (@sachin_rt) February 9, 2023
Congrats on 450! @ashwinravi99 #INDvAUS pic.twitter.com/jtga74oSFF



